ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இன்று முதற் தடவையாக கூடும் கோப் குழு

Published By: Vishnu

26 Nov, 2020 | 09:40 AM
image

முதற் தடவையாக ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு இன்று கூடுவுள்ளது.

இன்றைய தினம் கூடவுள்ள கோப் குழுவில், களனி கங்கை நீர் மாசவடைவது தொடர்பில் ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக அதிகாரிகளை தொடர்புபடுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் எஸ்.எச்.முனசிங்ஹ, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.ஏ. சுலானந்த பெரேரா மற்றும் பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிரி ஆகியோர் ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக கோப் குழுவுடன் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக நீர்ப்பாசன அமைச்சின் அதிகாரிகள், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள்,  மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள், முதலீட்டு சபையின் அதிகாரிகள் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கோப் குழுவில் கலந்துகொள்ளவுள்ளனர். 

கொவிட்-19 தொற்றுநோய் சூழல் காரணமாக சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால், நேரடியான வருகைகளைக் குறைக்கும் நோக்கிலும், கோப் குழுவின் பணிகளை நெறிப்படுத்தும் நோக்கிலும் ஒன்லைன் முறைமையை பயன்படுத்தப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46