அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின்னுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார்.

2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பான விசாரணையின்போது எஃப்.பி.ஐ யிடம் பொய் சொன்னதாக குற்றத்தை முன்னதாக ஒப்புக் கொண்டமையை கருத்திற் கொண்டே அவருக்கு ட்ரம்ப் புதன்கிழமை மன்னிப்பு வழங்கியுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ரஷ்ய தூதர் செர்ஜி கிஸ்லாக் உடனான 2016 தொடர்புகள் குறித்து எஃப்.பி.ஐக்கு தவறான அறிக்கைகளை வழங்கியதாக பிளின் 2017 இல் குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோதும், டிரம்ப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா விதித்த பொருளாதாரத் தடைகள் குறித்து மொஸ்கோவின் எதிர்வினையை மிதப்படுத்துவது குறித்து பிளின் மற்றும் கிஸ்லியாக் ஆகியோர் விவாதித்துள்ளனர்.

இந் நிலையில் அமெரிக்கத் தேர்தல்களில் ரஷ்யா தலையிட்ட குற்றச்சாட்டுகளை ஆராய 2017 ஆம் ஆண்டில் சிறப்பு ஆலோசகர் ரொபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.