கொவிட்-19 பரவல் காரணமாக மூன்று மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கத் தவித்த மேலும் 116 இலங்கையர்கள் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதன்படி இன்று அதிகாலை 12 மணியளவில் 42 இலங்கையர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியிலிருந்து எட்டிஹாட் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான EY-264 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அத்துடன் கத்தாரின், தோஹாவிலிருந்து 39 இலங்கையர்கள் கட்டார் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான கியூஆர் -668 என்ற விமானத்தில் அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதேவேளை ஓமான், மஸ்கட்டிலிருந்து ஓமான் ஏயர்லை நிறுவனத்துக்கு சொந்தமான WY-371 என்ற விமானத்தில் 35 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.