கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பல பகுதிகள் உடன் அமுலுக்க வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் - 19 கட்டுப்பாட்டு தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
இதற்கமைய களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட கிரிமெத்குடாவ கிராமசேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்திலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பண்டாரகம பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட, அட்டுலுகம கிராமசேவகர் பிரிவு, எபிடமுல்ல கிராமசேவகர் பிரிவு, கொலமெதிரிய கிராமசேவகர் பிரிவு ஆகியன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டி மாவட்டத்தின் அலவத்துகொட பொலிஸ் பிரிவின், புலுகஹதென்ன கிராமசேவகர் பிரிவு, தலம்புகஹவத்தை கிராமசேவகர் பிரிவு ஆகியன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.