முல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான தடை நீடிப்பு

Published By: Digital Desk 8

25 Nov, 2020 | 05:23 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு 46 பேருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை 30 ஆம் திகதி வரை நீடித்து முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று, கடந்த 20.11.2020 அன்று, மாவீரர் தினம் மேற்கொள்வதற்கு 46 பேருக்கு தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தது.



இந்நிலையில், இவ்வாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தடைக்கட்டளையை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி , தடைக்கட்டளை வழங்கப்பட்டவர்கள் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பதின்நான்கு பேர் கொண்ட குழுவினரால் 23.11.2020 நகர்த்தல் பத்திரம் (மோசன்)தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் 23.11.2020 அன்று இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணைகளில் மாவீரர் நாளுக்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டோருக்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், புரந்திரன் எஸ்.தனஞ்சயன், ருஜிக்கா நித்தியானந்தராஜா, திருமதி துஷ்யந்தி சிவகுமார், ஹாரிஸ், உள்ளிட்ட சட்டவாளர்கள் மன்றில் ஆஜராகியிருந்தனர்.



இந்நிலையில் பாதிக்கப்படடவர்கள் சார்பாக மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கேட்ட நீதிபதி வழக்கின் கட்டளையை வழங்க வழக்கினை இன்றைய திகதிக்கு தவணையிட்டுள்ளார்.

 

இந்நிலையில் கொழும்பிலிருந்து விமானம் மூலம் வருகைதந்த சட்டமா அதிபர் திணைக்கள சிரேஸ்ர சட்டத்தரணிகள் மூவர் முன்னாள் பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குணசேகர உள்ளிட்டவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பொலிஸ் உயரதிகாரிகள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோர் குறித்த ஆறு வழக்குகளையும் நகர்த்தல் பத்திரம் (மோசன்) தாக்கல் செய்யப்பட்டு  நேற்று (24.11.2020) திறந்த நீதிமன்றிலே குறித்த நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது, தடையுத்தரவு நீடிக்கப்பட வேண்டும் என்ற தமது தரப்பு நியாயங்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த வழக்குகளின் கட்டளையை ஏற்கனவே தெரிவிக்கப்பட்டபடி இன்று வழங்குவதாக நீதிபதி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு 46 பேருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை 30.11.2020  நீடித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிக்க 2,500...

2026-08-15 15:55:29
news-image

யாழில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

2026-08-15 15:19:13
news-image

“நீதியின் ஓலம்” போராட்டத்துக்கு அனுமதியளித்த வலி....

2026-08-15 15:30:06
news-image

இலங்கையின் உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்த அவுஸ்திரேலிய...

2026-08-15 15:58:50
news-image

அங்குலான கடற்பகுதியில் டோரா படகு விபத்து...

2026-08-15 14:22:51
news-image

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்தியாவின்...

2026-08-15 14:30:14
news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற மடு...

2026-08-15 13:41:43
news-image

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை...

2026-08-15 13:31:50
news-image

சோமரத்ன ராஜபக்‌ஷவை செம்மணிக்கு அழைத்து வாருங்கள்...

2026-08-15 15:40:22
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்கள்...

2026-08-15 13:16:34
news-image

செம்மணி அகழ்வுகள் தமிழர் இனப்படுகொலையின் தீவிரத்தை...

2026-08-15 12:40:40
news-image

அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானம் அதிகரிப்பு!

2026-08-15 12:21:55