பதுளை நகரில்  ஊவாமாகாண சபைக்கு முன்பாக இன்று (25.11.2020) ஊவாமாகாணத்தை சேர்ந்த வேலையில்லாத பட்டதாரிகளினால் அமைதியான முறையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு  ஊவாமாகாணத்தின் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில்  ஆசிரியர்கள் தெரிவுக்காக  பட்டதாரிகளிடையே  போட்டி பரீட்சை நடத்தப்பட்டது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “இதுவரையில் போட்டி பரீட்சைக்கு தோற்றிய சிலருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருந்த போதும், பரீட்சையில் தெரிவாகியுள்ள 853 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.

ஊவா மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 1,283 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும்  இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகளுக்கு  உரிய அதிகாரி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

 இப்பிரச்சினை தொடர்பில் ஊவாமாகாண ஆளுனருடன் கலந்துரையாடப்பட வேண்டும் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டநிலையில்,

ஆளுனருடன் கலந்துரையாட போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த பிரச்சினைக்கு ஊவாமாகாண ஆளுனர் விரைவில் தீர்வு பெற்றுதர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.