யாழ். மாவட்டத்தில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக யாழ் மாவட்ட செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்தார்.
பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2019 ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் இருந்து 1076 பெண்களுக்கு எதிரான வன்முறை முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும் 2020 ஆம் ஆண்டு இவ்வருடம் ஜனவரி மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை 1011 பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் யாழ் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்த நிலை காணப்படுகின்றது. வீட்டு வன்முறை, திருமணத்துக்கு முன் ,திருமணத்துக்கு பின்னரான வன்முறைச் சம்பவங்களே முறைப்பாடுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனினும் இவ்வாறான முறைப்பாடுகள் உரிய சட்ட நடைமுறைகளின் பிரகாரம் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் விசாரணை செய்யப்பட்டு அப் பிரச்சனைகளுக்குரிய தீர்வுகள் வழங்கப்படுகின்றன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM