ரஷ்யாவில் ‘கூகுள் சேர்ச்’ தேடுபொறி தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களை நீக்க தவறி விட்டதாக தெரிவித்து, கூகுள் நிறுவனத்தின் மீது ரஷ்யா அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இணைய தேடலில் அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் ‘கூகுள் சேர்ச்’ தேடுபொறி பயனாளர்களின் முதன்மையான தேர்வாக இருந்து வருகிற நிலையில், ரஷ்யாவில் ‘கூகுள் சேர்ச்’ தேடுபொறி தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களை நீக்க தவறி விட்டதாக கூறி கூகுள் நிறுவனத்தின் மீது ரஷ்யா அரசு வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடதக்கது. 



இது குறித்து ரஷ்யாவின் தகவல் கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் “பயங்கரவாதம், ஆபாசம் மற்றும் தற்கொலையை தூண்டுவது உள்ளிட்ட ஆபத்தான உள்ளடக்கங்களை அகற்ற கூகுள் தவறிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே கூகுள் நிறுவனத்துக்கு எதிராக ரஷ்யா அரசு நிர்வாக நடவடிக்கைகளை திறந்துள்ளது.

மேலும், 65, 670 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.