மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை கவலையானது - பேர்ள் அமைப்பு

Published By: Digital Desk 4

25 Nov, 2020 | 05:09 PM
image

(நா.தனுஜா)

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பல மாவட்டங்களில் தமிழ்த்தேசிய நினைவு தினமான மாவீரர்நாளை அனுஷ்டிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. தமிழர் நினைவு கூரல் மீது தொடர்ச்சியாக நிகழும் அரச அடக்குமுறையின் நீட்சியே இத்தகைய தடைவிதிப்புக்களாகும் என்று பேர்ள் அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.

இராணுவமயமாக்கலையும் சிங்களக் குடியேற்றங்களையும் மேலும் அதிகப்படுத்தும்  ஜனாதிபதியின் செயற்பாடு' | Tea Kadai Beanch

இதுபற்றி 'பேர்ள்' அமைப்பு இன்று புதன்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பல மாவட்டங்களில் தமிழ்த்தேசிய நினைவு தினமான மாவீரர்நாளை அனுஷ்டிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. தமிழர் நினைவுகூரல் மீது தொடர்ச்சியாக நிகழும் அரச அடக்குமுறையின் நீட்சியே இத்தகைய தடைவிதிப்புக்களாகும்.

நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் அதிகாரிகளால் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அத்தோடு கொவிட் - 19 வைரஸ் பரவலைத் தவிர்ப்பதற்கான சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சட்டச்செயன்முறைகள் என்பன மாவீரர்நாள் நினைவுகூரலுக்குத் தடையேற்படுத்துவதற்காக தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.

அதேவேளை இலங்கையின் இராணுவத்தளபதியும், போர்க்குற்றவாளியெனக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளவருமான சவேந்திர சில்வா கொவிட்-19 கட்டுப்பாடுகளை மேற்கோள்காட்டி, மாவீரர்நாள் நினைவேந்தல்கள் தடைசெய்யப்படும் எனக் கடந்தவாரம் தெரிவித்திருந்ததோடு, இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சுறுத்தியிருந்தார். .

அதனைத் தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வுகளுக்காகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் துயிலும் இல்லங்களைச் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தவாறு துப்புரவுசெய்ய முயற்சித்தவர்கள் பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டனர். வடக்கு மற்றும் கிழக்கில் துயிலும் இல்லங்களுக்கு அருகில் பாதுகாப்புப் படையினர் சோதனைச்சாவடிகளை அமைத்துள்ளனர்.

மேலும் உள்ளுர் நீதிமன்றங்கள் பொதுநிகழ்வுகளுக்குக் குறிப்பாகத் தடைவிதித்துள்ளதோடு பல தனிநபர்களும் அரசியல் கட்சிகளும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கும் அவற்றில் கலந்துகொள்வதற்கும் தடையுத்தரவு பிறப்பித்துள்ளன.

கொவிட்-19 கட்டுப்பாடுகள் இத்தடைகளை நியாயப்படுத்துவதற்கான காரணமாகப் பயன்படுத்தப்பட்டாலும், சிவப்பு-மஞ்சள்நிறக்கொடிகள் மற்றும் பதாகைகளைப் பயன்படுத்துவது போன்ற தீங்கற்ற நினைவுகூரல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் தொடர்ச்சியாக இலக்குவைக்கப்படுவது அரசாங்கத்தின் நோக்கத்தைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது.

தடைகளேதுமற்ற நினைவுகூரலானது வடுக்கள் ஆற்றப்படுவதற்கும் போரில் இழக்கப்பட்டவர்களைக் கௌரவப்படுத்துவதற்கும் இன்றியமையாததொன்றாக அமைந்திருக்கிறது.

2009 இற்குப் பின்னர் தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளில் ஒன்றாகவும் அது இருந்து வருகிறது. எனவே, மாவீரர்நாள் நினைவேந்தல்களைத் தடைசெய்வதென்பது  உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்கான தமிழர்களின் உரிமையின் ஏற்றுக்கொள்ளமுடியாமையின் விளைவேயாகும் என்று பேர்ள் அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53