அலுவலகத்தில் பெண் ஊழியர்களை தாக்கிய அதிகாரிக்கு பிணை - நடந்ததென்ன ?

By R. Kalaichelvan

25 Nov, 2020 | 05:49 PM
image

பெண் ஊழியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலதிகாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா, உடுகம்பொலயில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரை அவரது மேலதிகாரி மோசமாகத் தாக்குகின்ற காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த அதிகாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அந்த காணொளியில், மேலதிகாரியினால் கோரப்பட்ட தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக்கொடுப்பதில் சில நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டமைக்காக குறித்த பெண் ஊழியர் மேலதிகாரியினால் தாக்கப்பட்டிருக்கிறார்.

இந்த சம்பவத்தின் காணொளி நேற்று முன்தினம் சமூகவலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்டோர் தமது டுவிட்டர் பக்கங்களில் அந்த மேலதிகாரியின் செயற்பாட்டைக் கடுமையாகக் கண்டனம் செய்து பதிவுகளைச் செய்திருந்தனர்.

'நான் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன். தொழில்புரியும் இடங்களில் இத்தகைய வன்முறைகள் இடம்பெறுவதை எமது அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை 'அரச அலுவலகமொன்றில் சக பெண் ஊழியர் மீது வெறுக்கத்தக்க ஆண் பேரினவாதத் தாக்குதல் காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் பரவிவருகிறது.

இந்தக் கொடூரமான குற்றச்செயல் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டும் என சஜித் பிரேமதாஸ தனது டுவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.

இந்நிலையில் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிகாரி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருப்பதுடன் இதுகுறித்து விசேட விசாரணைகளும் இடம்பெற்றதையடுத்து, இன்று குறித்த நபர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காணாமல் போன வாழைச்சேனை மீனவர்கள் 64...

2022-11-28 11:28:14
news-image

என்னால் இலங்கை போன்ற ஒரு நிலையை...

2022-11-28 11:27:32
news-image

வலுவிழக்கும் உலக ஒற்றை அதிகார அரசியல்...

2022-11-28 11:08:41
news-image

அடுத்த வருடம் முதல் ஆரம்ப வகுப்பிலிருந்தே...

2022-11-28 10:59:58
news-image

போதைப்பொருள் கடத்தலிற்கு சிங்கப்பூர் பாணியில் மரணதண்டனை...

2022-11-28 11:05:01
news-image

மனைவியை தாக்கிய நபர் வைத்தியசாலைக்குச் சென்றபோது...

2022-11-28 11:14:36
news-image

கரையோரப் பாதை ரயில் மார்க்கத்தின் சமிக்ஞை...

2022-11-28 10:26:40
news-image

'தாய்நிலம்' எனும் ஆவணப்படத்தை பாருங்கள் -...

2022-11-28 11:10:10
news-image

அராலியில் கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு...

2022-11-28 10:57:53
news-image

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 3 புதிய...

2022-11-28 10:44:24
news-image

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் யாழில்...

2022-11-28 10:19:37
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-28 08:37:43