கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனுக்கு பிணை வழங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தலா ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப்பிணையில் இன்று (25.11.2020) ) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு,பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

ரிசாத் பதியுதீன் கடந்த ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி காலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

2019 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் இடம்பெயர்ந்தோரை அழைத்து சென்றமை தொடர்பாக பொது நிதியை தவறான முறையில் பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றசாட்டுகள் ரிசாத் பதியுதீன் மீது சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.