டோஹா விமான நிலையத்தில் கைவிடப்பட்ட குழந்தையின் பெற்றோர் அடையாளம்

Published By: Digital Desk 3

25 Nov, 2020 | 03:19 PM
image

கடந்த மாதம் டோஹா சர்வதேச விமான நிலையத்தில் கைவி­டப்­பட்ட புதிதாகப் பிறந்த பெண் குழந்­தை­யின் பெற்­றோர் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­தாக கட்டார் அறி­வித்­துள்­ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

ஒக்டோபர் 2 ஆம் திகதி அன்று புதிதாகப் பிறந்த ஒரு குழந்தை ஹமத் சர்வதேச விமான நிலையத்தின் குளியலறையில் கைவிடப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு உடனடியாக மருத்துவ கவனிப்பும்  வழங்கப்பட்டது. 

விமான நிலைய பணியாளர் ஒருவர் தேவை நிமித்தம் அங்கு சென்ற வேளையில் சிசுவைக் கண்டு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்து குழந்தை மீட்கப்பட்டுள்ளது. 

மேலும் குழந்தையின் தாய் பற்றி அறிந்து கொள்ள அன்றைய தினம் பல பெண்களிடம் திடீர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இவ்வாறு அவுஸ்திரேலியப் பெண்கள் 13 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையினால் கட்டாருக்கும், அவுஸ்திரேலியாவுக்கும்மிடையில் சிறு விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கைவி­டப்­பட்ட பெண் குழந்­தை­யின் பெற்­றோர் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­தாக கட்டார் அறி­வித்­துள்­ளது.

ஆசிய நாட்­டைச் சேர்ந்த அந்தத் தாயாரை கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் அது தெரிவித்தள்ளது.

அந்­தத் தாயார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே சம­யத்­தில் முழு உடல் சோத­னைக்கு உத்­த­ர­விட்ட அதி­கா­ரி­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று கட்டார் அரசாங்கம் அறிவித்துள்­ளது.

ஆனால் அவர்­கள் மீது எத்­த­கைய குற்­றச்­சாட்டு சுமத்­தப்­படும் என்ற விவ­ரம் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இந்த சம்பவத்தின் விளைவாக ஏற்பட்ட "எந்தவொரு பயணியின் தனிப்பட்ட சுதந்திரத்தில் ஏதேனும் துன்பம் அல்லது மீறல்களுக்கு" மன்னிப்பு கேட்டு கட்டார் அரசு அக்டோபர் 28 ஆம் திகதி  ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08