மாணவர்களை பாடசாலைக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு 700 க்கும் மேற்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்கின்றனர். அதனால் கடுமமையான சுகாதார பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து வாரியத்தின் துனை பொது மேலாளர் தெரிவித்தார்.

அத்தோடு நாடு முழுவதும் 746 பஸ் சேவைகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிளுக்கு இச் சேவை செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சில பகுதிகளில் பாடசாலைகளுக்கான பஸ்களில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் அச் சேவை உடனடியாக நிறுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.