குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது மஹர சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசகரவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி சாட்சியங்களை உருவாக்கியமை தொடர்பிலேயே அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுளளமை குறிப்பிடத்தக்கது.