பிரபு தேவாவின் திருமணத்தை உறுதி செய்தார் சகோதரன் ராஜூ சுந்தரம்..!

Published By: J.G.Stephan

25 Nov, 2020 | 01:37 PM
image

நடிகர் பிரபு தேவா, பிசியோதெரபிஸ்ட் ஒருவரை கடந்த மே மாதம் திருமணம் செய்துள்ளார்.

1994 இல் இந்து படத்தின் மூலமாக நடிகராகத் திரையுலகில் அறிமுகமானார் பிரபு தேவா. அதற்கு முன்பு பல படங்களில் பாடல் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடனத்துறையில் தனக்கென தனித்தடத்தை பிடித்துள்ளார் பிரபு தேவா. 
 

1995 இல் ரமலதாவைத் திருமணம் செய்தார் பிரபு தேவாவிற்கு மூன்று குழந்தைகள். 2008 இல் ஒரு மகன் உடல்நலக் குறைவால் இறந்து போனார்.

2011 இல் பிரபு தேவாவும் ரமலதாவும் விவகாரத்து பெற்றார்கள். இதனையடுத்து, நடிகை நயன்தாராவிற்கும் பிரபு தேவாவிற்கும் காதல் மலர்ந்தது. எனினும் சில வருடங்களில் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ஹிமானி என்பவரை கடந்த மே மாதம் சென்னையில் திருமணம் செய்துள்ளார். ஊரடங்கு காலகட்டத்தில் திருமணம் நடைபெற்றதால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அதில் கலந்துகொண்டுள்ளார்கள்.

இதுபற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த பிரபு தேவாவின் சகோதரர் ராஜூ சுந்தரம், பிரபு தேவாவுக்குத் திருமணம் ஆனது உண்மைதான். இதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right