வெலிகந்தை கொவிட்-19 சிகிச்சை நிலையத்திலிருந்து நேற்றிரவு தப்பிச் சென்ற கொரோனா நோயாளி ஒருவர் பிடிபட்டுள்ளார்.

தப்பிச் சென்ற சிறிது நேரத்திலேயே குறித்த நபர் வெலிகந்தை பகுதியில் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினரால் பிடிபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தப்பிச் செல்ல முயன்ற மேற்படி நபர் இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் ஆவார்.