நாட்டின் பல்வேறு பகுதிகளில் 27,900 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் உள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதன்படி 27,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 73,884 பேர் தங்களது குடியிருப்புகளில் சுகாதார அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர்.

இவ்வாறான நபர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடையும் வரை அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாது என்றும், வெளி நபர்கள் யாரும் அவர்களைப் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அதேநேரம் தனிமைப்படுத்தல் நபர்களையும் அவர்கள் வசிக்கும் இடங்களையும் உன்னிப்பாக அவதானிக்க பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் கூறினார்.