சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் (ஐ.சி.சி) புதிய சுயாதீன தலைவராக நியூஸிலாந்தின் கிரெக் பார்க்லே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் சஷாங்க் மனோகர் குறித்த பதவியிலிருந்து விலகிய பின்னர் இடைக்காலத் தலைவராக இம்ரான் கவாஜா நியமிக்கப்பட்டார்.

இந் நிலையில் கடந்த வாரம் 16 பேர் கொண்ட ஐ.சி.சி. வாரியத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்ற கிரெக் பார்க்லே சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் புதிய சுயாதீன தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆக்லாந்தைச் சேர்ந்த வணிக வழக்கறிஞரான கிரெக் பார்க்லே, 2012 முதல் நியூசிலாந்து கிரிக்கெட்டின் (NZC) பணிப்பாளராக இருந்து வருகிறார். தற்போது சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் குழுவில் நியூஸிலாந்தின் பிரதிநிதியாக உள்ளார். 

எனவே ஐ.சி.சியை ஒரு சுயாதீனமான திறனுடன் வழிநடத்த அவர் தற்சமயம் வகிக்கம் பதவியிலிருந்து விலகவுள்ளார்.