பிரான்ஸில் கடந்த 24  மணி நேரத்தில் 458 பேர் உயிரிழந்ததை அடுத்தது கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,324 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு பொது சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 24  மணிநேரத்தில் புதிதாக 9,155 கொரோனா தொற்றாளர்கள் பதிவு வெய்யப்பட்டுள்ளனர். 

கொரோனா தொற்று ஆரம்பமானதிலிருந்து இதுவரை பிரான்சில் 2.1 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 7 நாட்களில் மேலும் 12,174 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 1,833 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த பின்னர் பிரான்ஸில் அக்டோபர் 30 ஆம் திகதி அன்று மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தற்போது நவம்பர் 28 ஆம் திகதி முதல் கட்டுப்பாடுகளை எளிதாக்கும் மூன்றாம் கட்ட திட்டத்தை அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் நாளாந்த  எண்ணிக்கை 5,000 ஐ கடக்கவில்லை என்றால், ஜனவரி 20, 2021 அன்று பிரான்ஸில் உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள் திறக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.