இணையவழியூடான கற்பித்தலில் குறைவான மாணவர்களுக்கே பயன்: கபில பெரேரா

Published By: J.G.Stephan

25 Nov, 2020 | 01:11 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட்  காரணமாக கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டமைக்கு மாற்றீடாக இணையவழி மூலம் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அதன் மூலம் நூற்றுக்கு 20 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களுக்கே பயன்கிடைத்துள்ளது. எனவே தான் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கொவிட் முதலாம் அலை ஏற்பட்ட போதே பாடசாலைகளை எவ்வாறு ஆரம்பித்து நடத்திச் செல்வது என்பது குறித்த சுற்றுநிரூபம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய திங்கட்கிழமை மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் சில பாடசாலைகளை திங்களன்று திறக்காமலிருக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம் - திம்புலாகல, தம்புத்தேகம, திரப்பனை ஆகிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளையும் , கிழக்கு மாகாணத்தில் கற்குடா , கந்தளாய் உள்ளிட்ட 5 பாடசாலைகளையும், வடமேல் மாகாணத்தில் 48 பாடசாலைகளையும் , தென் மாகாணத்தில் அக்குரஸ்ஸவிலுள்ள ஒரு பாடசாலையையும் இவ்வாறு திறக்காமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 10, 165 பாடசாலைகள் காணப்படுகின்றன. அவற்றில் சுமார் 5,300 பாடசாலைகளை  திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொவிட் காரணமாக 190 நாட்களில் 80 நாட்கள் மாத்திரமே பாடசாலைகள் இடம்பெற்றுள்ளன. பாடசாலைகளை மீள ஆரம்பிக்க எடுத்த தீர்மானத்தில் குறைபாடுகள் காணப்படலாம். அதனை சுட்டிக்காட்டினால் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04