இதய பாதிப்புகளை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்றுவதில் தற்போது அறிமுகமாகியிருக்கும் ஆன்டிபாடி சிகிச்சை நல்ல பலனளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இன்றைய திகதிகளில் உலக அளவில் 250 நபர்களில் ஒருவருக்கு பரம்பரை பரம்பரையாக வரும் Hypercholesterolemia எனப்படும் கெட்ட கொழுப்பு பாதிப்புக்கு ஆளாகிறார்கள். 

அதாவது கெட்ட கொழுப்பின் அளவு  இயல்பான அளவைவிட கூடுதலாக அதிகரித்து, இரத்த குழாய்களில் உட்புறச் சுவரில் படியும். 

இதனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இதயம் தொடர்பான  சிக்கல்களை உருவாக்குகிறது. இதன் காரணமாக பலருக்கும் இளம்வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

இந்நிலையில், இரத்தக் குழாய்களில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி நல்ல கொழுப்புகளின் அளவினை உயர்த்த 'ட்ரிபிள் தெரபி' எனப்படும் சிகிச்சை முழுமையான நிவாரணத்தை வழங்கி வருகிறது. 

இந்நிலையில், ஆன்டிபாடி சிகிச்சை எனப்படும் சிகிச்சை தற்போது நல்லதொரு பலனை வழங்கி வருகிறது. 

இரத்த குழாய்களில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவுகளை 50 சதவீதத்திற்கு மேல் குறைத்து நல்ல கொழுப்பின் அளவுகளை அதிகரிக்க உதவுகிறது என்று மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இதனால் தற்போது கெட்ட கொழுப்புகளை அகற்றுவதற்கு ஆன்டிபாடி சிகிச்சையை மேற்கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

டொக்டர் தங்க பிரஜின்

தொகுப்பு அனுஷா.