கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 198 பேர் நேற்று நாட்டை வந்தடைந்தனர்.

அந்தவகையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 143 பேரும் , மாலைதீவில் இருந்து 53 பேரும் , கட்டாரில் இருந்து 02 பேருமே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.