(க.பிரசன்னா)

2021 ஜனவரி மாதம் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் உரிய முறையில் நிறைவு செய்யப்பட்டுள்ளதா என்பதனை ஆராய்வதற்காக உரிய பாடத்திட்டங்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்களிடமிருந்து கல்வி அமைச்சு கருத்துக்களை கோரியுள்ளது.

தரம் 11 வகுப்புக்கான கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்கள் கல்வி அமைச்சின் இணையத்தளத்தினூடாக தங்களது கருத்துக்களை முன்வைக்க முடியுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, http://info.moe.gov.lk எனும் இணையத்தள முகவரிக்கு பிரவேசித்து ஆசிரியர்கள் தங்களது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி கருத்துக்களை முன்வைக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இணையத்தளம் ஊடாக எந்தவொரு ஆசிரியருக்கேனும் தமது கருத்துக்களை முன்வைக்க முடியாத பட்சத்தில், grade11@moe.gov.lk  எனும் மின்னஞ்சல் முகவரியின் மூலம் தங்களது கருத்துக்களை முன்வைக்க முடியுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.