அரச ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? - விஜித்த ஹேரத் கேள்வி

Published By: Vishnu

25 Nov, 2020 | 08:15 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படுகின்றவர்களுக்கு 2016 ஜனவரியில் இருந்து ஓய்வூதியம் நிறுத்தப்பட்டிருப்பது தொடர்பாக அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவி்லலை. இதனால் ஒரு இலட்சத்தி 18 ஆயிரம் ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய மரபுரிமைகள், அரசாங்க சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, இராஜாங்க அமைச்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பொது நிர்வாக  அமைச்சு என்ற பெயர் காலா காலமாக இருந்து வரும் ஒன்றாகும். ஆனால் இந்த முறை அதனை அரச சேவைகள் அமைச்சாக மாற்றப்பட்டிருக்கின்றது.இது அரச ஊழியர்களை பொது நிர்வாக சேவைக்கு எடுத்துக்கொள்ளாமல் அவர்களை சாதாரண அரச சேவையாளர்களாக இருப்பதற்கான திட்டமாகும். 

அதேபோன்று அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வோ அல்லது வேறு பொடுப்பனவுகளோ வரவு செலவு திட்டத்தில் மாத்திரமே கிடைக்கப்பெறுகின்றது. ஆனால் முதல் தடவையாக இந்த முறையே அரச ஊழியர்களுக்கு எந்தவித நிவாரணமும் வழங்கப்படவி்லலை.

அத்துடன் அரச மற்றும் தனியார் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60வரை அதிகரித்திருப்பதன் நோக்கம் என்ன?. அரச ஊழியர்களின் ஓய்வூதிய நிதி மற்றும் தனியார் ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதி என்பவற்றை அரசாங்கத்தின் தேவைக்கு பயன்படுத்திக்கொள்வதற்காகும். கடந்த காலங்களிலும் இதனை மேற்கொள்ள முற்பட்டார்கள். ஆனால் தற்போது  ஓய்வூபெறும் வயதை அதிகரித்து மேற்கொள்ளப்போகின்றனர்.

மேலும் அரச ஊழியர்களின் ஓய்வூதியம் கடந்த 2016 ஜனவரியில் இருந்து நிறுத்தப்பட்டிருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்க காலத்தில் இதனை மேற்கொள்ளும்போது தற்போதை அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்து, அதற்கு எதிராக குரல் கொடுத்தத்துடன் ஆட்சிக்கு வந்தத்துடன் மாற்றியமைப்பதாகவும் தெரிவித்தனர். 

ஆனால் அரசாங்கத்தின் 2020 வரவு செலவு திட்டத்தில் இதுதொடர்பாக எந்த வார்த்தையும் இருக்கவில்லை தற்போது சமர்ப்பித்திருக்கும் 2021 வரவு செலவு திட்டத்திலும் இல்லை. இதனால் ராணுவ மேஜர்கள் உட்பட ஒரு இலட்சத்தி 18 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் தற்போது அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படுகின்றவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை. எதிர்வரும் காலங்களில் அரசாங்கம் கொள்கை ரீதியில் எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் அதனை வழங்குவது தொடரிபல் தீர்மானிக்கப்படும் என அவர்களுக்கு வழங்கப்படும் நியமனக்கடிதத்தில் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதிலும் அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லை. பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதாக தெரிவித்து ஒருசிலர் கல்வி நிறுவனங்களின் நுளைவாயில் காவலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது சரியா என கேட்கின்றேன். அதேபோன்று நியமனம் வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு ஒருவருட காலம் பயிற்சி வழங்குவதுடன் அந்த காலம் வரை 20 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. 

ஆனால் கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் வரையிலும் படிக்காத இளைஞர் யுவதிகள் ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வழங்கும் திட்டத்தில் அவர்களுக்கு 6 மாத காலம் பயிற்சியுடன் 22 ஆயிரத்தி 500 ரூபா சம்பளம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது நியாயமா என கேட்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01