தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு சென்ற மேலும் 296 இலங்கையர்கள் அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன் நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலிருந்து 93 இலங்கையர்கள் நேற்றிரவு 11.30 மணிக்கு எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஈ.கே.-648 என்ற விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும் மாலைத்தீவிலிருந்து 53 இலங்கையர்கள் ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -104 என்ற விமானத்தில் நேற்றிரவு 11.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அத்துடன் கட்டார், தோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கியூஆர் -688 என்ற விமானத்தில் இரு இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதேவேளை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலிருந்து மேலும் 50 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -226 என்ற விமானத்தில் அதிகாலை 4.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அது மாத்திரமன்றி இந்தியாவின் மும்பையிலிருந்து 98 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -1042 என்ற விமானத்தில் இன்று காலை 6.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தும் உள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் விமான நிலையத்தில் உள்ள பல தனியார் வைத்தியசாலைகளின் ஊழியர்களினால் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்படும் உள்ளனர்.