நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 459 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையானது 20,967 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 459 கொரோனா நோயாளர்களுள் 458 பேர் பேலியகொட - மினுவாங்கொடை கொத்தணிப் பரவலில் சிக்கியவர்கள் ஆவர்.

ஏனைய ஒருவர் கட்டுநாயக்கவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த துருக்கிய ஏயர்லைன்ஸ் விமான உதவியாளர் ஆவார்.

இதேவேளை நேற்யை தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 465 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதனால் குணமடைந்த மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையும் 14,962 ஆக உயர்வடைந்தது.

தற்போது நாடு முழுவதும் உள்ள 56 வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் 5,911 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 601 நபர்கள் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக நேற்றிரவு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் உறுதிசெய்யப்பட்டது.

இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 94 ஆக பதிவானது.

01. கினிகத்தேன பிரதேசத்தைச்சேர்ந்த 74 வயதான ஆண் நபர் ஆவார். சிறைச்சாலை தை;தியசாலையிலிருந்து ராகம போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் 2020 நவம்பர் மாதம் 22ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் -19 வைரஸ் தொற்றுடன் வயிற்றுப்போக்கு காரணமாக ஏற்பட்ட பல உறுப்பு செயலிழப்பு ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

02. சியம்பலாபே தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான ஆண் நபர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 2020 நவம்பர் மாதம் 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீண்டநாள் நீரிழிவு நோயுடன் கொவிட் 19 தொற்றக்குள்ளானதினால் நோய் அதிகரித்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

03. கொழும்பு 15 பிரதேசத்தைச்சேர்ந்த 73 வயதான பெண். கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்த வைத்தியசாலையில் 2020 நவம்பர் மாதம் 24 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் அழற்சி மற்றும் கொவிட் 19 நிமோனியா நிலைமையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

04. பண்டாரகம அட்டுலுகமை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான ஆண் நபர். பாணந்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து ஐனுர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அத்துடன் அந்த வைத்தியசாலையில் 2020 நவம்பர் மாதம் 24 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் நாள்பட்ட கல்லீரல் நோய் மூளையை பாதித்தமை மற்றும் வீக்கம் ஏற்பட்டமையென தெரிவிக்கப்பட்டுள்ளது.