தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள் தேவையேற்படின் மீண்டும் முடக்கப்படும் - இராணுவத்தளபதி

25 Nov, 2020 | 01:18 AM
image

(எம்.மனோசித்ரா)

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் , அவர்களால் பெருமளவானோருக்கு எச்சரிக்கை ஏற்படுமாயின் குறித்த பிரதேசங்களை மீண்டும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதே வேளை, மேல் மாகாணத்திலிருந்து மத்திய மலைநாட்டுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு விடுத்த அறிவித்தலை மீறி சிலர் அந்த பகுதிகளுக்குச் சென்றமையினாலேயே மத்திய மாகாணத்தில் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கொழும்பிலிருந்து மத்திய மலைநாட்டை அண்மித்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தோம். எனினும் அந்த அறிவித்தலை மீறிச் சென்ற நபர் ஒருவரால் மஸ்கெலியாவில் தொற்று பரவல் ஏற்பட்டது.

இதே போன்று கொட்டாஞ்சேனையிலிருந்து சென்ற நபரொருவராலேயே நுவரெலியாவிலும் தொற்று இனங்காணப்பட்டது. தொற்றாளர் ஒருவர் சென்றமையினாலேயே குறித்த இரு பிரதேசங்களிலும் வைரஸ் பரவல் இனங்காணப்பட்டுள்ளதாக புலனாய்வுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்றாளர்கள் இனங்காணப்படமாட்டார்கள் என்று கூற முடியாது. அவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் அவர்களின் தொடர்புகள் குறித்து ஆராய்ந்த பின்னர் , பெருமளவானவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமென கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கமைய தேவையேற்படின் மீண்டும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். எச்சரிக்கை இல்லை என்றால் தனிமைப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது.

இதே வேளை மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது. மத்திய கிழக்கிலிலிருந்து மாத்திரமின்றி ஏனைய நாடுகளிலிருந்தும் இலங்கையர்கள் அடுத்த வாரம் முதல் அழைத்து வரப்படுவார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40