அரசாங்கம் மனிதாபிமானத்துடன் செயற்படவேண்டும் - சஜித் பிரேதமாச சபையில் கோரிக்கை

25 Nov, 2020 | 01:09 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் வாழும் மக்கள் தொடர்பில் அரசாங்கம் கடைப்பிடித்துவரும் மனிதாபிமானமற்ற நடவடிக்கையாலே மக்கள் குழப்பமடைந்திருக்கின்றனர். நாங்கள் மக்களை குழப்பியதாக தெரிவிக்கப்படும் செய்தியை முற்றாக நிராகரிக்கின்றேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நிலையியற்கட்டளை 27/ 2இன் கீழ் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கொவிட் தனிமைப்படுத்தல் பிரதேசங்களில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாகவும் அதற்காக அரசாங்கம் எடுத்துவரும் தீர்வுகள் தொடர்பாகவும் பல கேள்விளை முன்வைத்தார். குறித்த கேள்விகளுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு பதிலளிப்பதாக ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துவிட்டு, எதிர்க்கட்சி தலைவர் மக்கள் குழப்பக்கூடாது என குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

கொவிட் தனிமைப்படுத்தல் சட்டத்தினால் மேல்மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் பாரியளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைச்செலவுக்காக அரசாங்கத்தின் 5ஆயிரம் ரூபா ஒருமாதத்துக்கு போதுமானதல்ல. அரசாங்கத்தின் நடவடிக்கையால்தான் மக்கள் கொவிட்டையும் கண்டுகொள்ளாமல் குழப்படைந்து வீதிக்கிறங்க முற்படுகின்றனர்.

ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பதுபோல் மக்களை குழப்ப எங்களுக்கு எந்த தேவையும் இல்லை. மக்கள் எதிர்நோக்கியுள்ள கஷ்டத்தில் அரசியல் செய்யும் தேவை எமக்கில்லை. அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5ஆயிரம் ரூபாவை 30 நாட்களுக்கு பிரித்து செலவழிக்கவேண்டும் என அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரே தெரிவித்திருக்கின்றார். 

அரச தரப்பின் இவ்வாறான பேச்சுக்களினால்தான் மக்கள் ஆத்திரமடைந்து குழப்படைகின்றனர். அதனால் அரசாங்கம் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் தொடர்பில் மனிதாபிமானத்துடன் செயற்படவேண்டும் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31