கொரோனா தொற்று காரணமாக நாட்டில் மேலும் 04 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கினிகத்தேனை பிரதேசத்தை சேந்த 74 வயது ஆண் சிறைச்சாலை வைத்திய சாலையிலிருந்து ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சியபலாபே வடக்கு  பிரதேசத்தை  சேந்த 54 வயது ஆண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.  இந்த மரணம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 15 ஐ  சேந்த 73 வயது பெண் ஹோமாகம வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளார்.  இந்த மரணம் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பண்டாரகமையை சேந்த 42 வயது ஆண் ஐ.டி.எச் வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளார்.  இந்த மரணம் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்வடைந்துள்ளது.