ரஷ்யாவின் கமலேயா தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் தேசிய ஆராய்ச்சி மையம் மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட தனது தடுப்பூசியின் செயல்திறனை அறிவித்துள்ளன.

அதன்படி உலகில் முதலாவதாக பதிவுசெய்யப்பட்ட கொவிட்-19 க்கு எதிரான ரஷ்யாவின் ஸ்பூட்னிக் V தடுப்பூசி பரிசோதனையில் 95 சதவீதம் பலனை கொடுத்துள்ளது.

ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனையின் 2 ஆவது இடைக்கால பரிசோதனை முடிவுகளை ரஷ்யா இன்று வெளியிட்டுள்ளது. 

அதில் கொரோனா பாதிக்கப்பட்ட 39 பேருக்கும், 18 ஆயிரத்து 794 தன்னார்வலளர்களுக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டதில் 28 நாட்கள் இடைவெளியில் தடுப்பூசி 91.4 சதவீதம் செயல் திறன் கொண்டதாக உள்ளது. அதேவேளை 48 நாட்கள் இடைவெளியில் தடுப்பூசியின் செயல்திறன் 95 சதவீதமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தைகளில் ஒரு டோஸுக்கு 10 டாலர் (8.40 யூரோக்கள்) குறைவாகக் கிடைக்கும், மேலும் ரஷ்ய குடிமக்களுக்கு இது இலவசமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நபருக்கு இரண்டு டோஸ்கள் இந்த தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித தடுப்பூசியை அடிப்படையாகக் கொண்ட இரண்டு வெவ்வேறு திசையன்களைப் பயன்படுத்துவதால் ரஷ்ய தடுப்பூசி தனித்துவமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது இரண்டு அளவுகளுக்கும் ஒன்று மற்றும் ஒரே திசையன் அடிப்படையிலான தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது வலுவான மற்றும் நீண்டகால நோயெதிர்ப்பு சக்தியை அனுமதிக்கிறது.