புற்றுநோய் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தேனியைச் சேர்ந்த நடிகர் தவசி தனது 60 வயதில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

கீழக்கு சீமையிலே படத்தில் அறிமுகமாகி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், “கருப்பன் குசும்புக்காரன்” என்ற வசனத்தை பேசி பிரபலமான தவசி, அண்ணாத்தே வரை 140-க்கும் மேற்பட்ட படங்களில் தவசி நடித்துள்ளார்.

உணவுக் குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தவசிக்கு மனைவி அங்கம்மாள், (48) மகன் பீட்டர் ராஜன், மகள் முத்தரசி ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில், தவசியின்  வைத்தியசாலை செலவுக்குக்கூட பணம் இல்லாமல் கஷ்டப்படும் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் திரைத்துறையினர் உதவி செய்ய வேண்டும் என சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

அந்த பதிவினை தொடர்ந்து நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன்,விஜய் சேதுபதி,ரோபோ சங்கர், சிம்பு ஆகியோர் பணவுதவி செய்தனர்.

நடிகர் தவசியின் மரணத்துக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பலர் இரங்கல் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.