போதைப்பொருள் வர்த்தர்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் 13 பேரும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சந்தேக நபர்கள் இன்று (24.11.2020) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.