( எம்.நியூட்டன்)
“கொவிட் -19 இடர் சூழ்நிலையிலும் வன்முறைகளை எதிர்கொள்ளும் பெண்களை வலுப்படுத்துவோம்” என்னும் தொனிப்பொருளில் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் விழிப்புணர்வுத் திட்டம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் சமூக செயற்பாட்டு மையம் இந்த விழிப்புணர்வு செயற்பாட்டை நாளை (25.11.2020) ஆரம்பித்து டிசெம்பர் 10ஆம் திகதிவரை முன்னெடுக்கவுள்ளது.
இதுதொடர்பில் அந்தத் தொண்டு நிறுவனம் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பால்நிலை வன்முறைக்கு எதிரான பதினாறு நாள் விழிப்புணர்வு செயற்பாடு நாளை புதன்கிழமை நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் வரும் டிசெம்பர் 10ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் சமூக செயற்பாட்டு மையமும் (JSAC) பெண்கள், சிறுவர்கள் நலன் சார்ந்து கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக வட மாகாணத்தில் செயற்படுகின்ற நிறுவனம் என்ற அடிப்படையில் இதே காலப்பகுதியில் ஒவ்வொரு தொனிப்பொருளில் பரந்துபட்ட அளவில் விழிப்புணர்வு செயற்பாடுகளினை முன்னெடுத்து வந்திருக்கின்றது.
இம்முறை கொரோனா அசாதாரண நிலமை காரணமாக எமது செயற்பாடுகள் “கொவிட் -19 இடர் சூழ்நிலையிலும் வன்முறைகளை எதிர்கொள்ளும் பெண்களை வலுப்படுத்துவோம்” என்னும் தொனிப்பொருளில் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் எமது பரப்புரைச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக பதினாறு நாட்கள் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.
இதன் ஆரம்ப நிகழ்வாக இன்று முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் உதவி அரசாங்க அதிபர் ம.பிரதீபனால் விழிப்புணர்வு துண்டறிக்கை வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
அத்துடன் நாளை தொடக்கம் டிசெம்பர் 10ஆம் திகதி வரை தொடர்ச்சியாக எமது விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM