பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 2.4 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கல்கிசையில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபர் இன்று கல்கிசை நீதவான் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.