Published by T. Saranya on 2020-11-24 13:43:56
இந்திய கடற்கரையில் படகொன்றுடன் இலங்கையைச் சேர்ந்த மீனவரொருவர் கரையொதுங்கிள்ளதாக எமது இந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறு கரையொதுங்கிய மீனவர் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 23 வயதுடைய விஜயமூர்த்தி என எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
குறித்த மீனவர், மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது பலத்த காற்று வீசியதால் திசைமாறி இந்தியாவின் நாலுவேதபதி கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த மீனவர் சென்ற படகில் மீன் பிடி வலைகள் அதிக அளவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. நேற்று மாலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் நிவர் புயல் உருவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மாலை குறித்த புயல் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.