மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் மற்றும் இடைக்கால தொழில் புரியும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன், SLIIT அண்மையில் career day நிகழ்வை மாலபே பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

வெவ்வேறு  40 நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் மாணவர்களும் துறைசார்ந்த நிபுணர்களை சந்தித்து உரையாடுவதற்கான வாய்ப்பை பெற்றிருந்தனர். MAS, Brandix i3, Dialog, Mobitel, Millennium IT, Orange IT, WSO2, Virtusa, IFS, hSenid, CodeGen International, Leapset மற்றும்NDB ஆகியன இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தன.

“துறைசார் நிபுணர்களை சந்திப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு நிகழ்வாக நாம் இந்த career day நிகழ்வை ஏற்பாடு செய்கிறோம். அத்துடன் வியாபாரங்கள் பற்றி அறிந்து கொள்வது, 

துறைசார் எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்வதும் இந்த நிகழ்ச்சியின் நோக்கங்களாக அமைந்துள்ளன. இடைக்கால தொழில்நிலைகளுக்கு இணைத்துக் கொள்வது, மாதிரி நேர்முகத் தேர்வுகள் மற்றும் சுய ஆளுமை விருத்தி நிகழ்வுகள் போன்றனவும் இந்த நிகழ்வில் முன்னெடுக்கப்பட்டிருந்தன”என SLIIT இன் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே தெரிவித்தார்.