நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் சுகாதார விதிமுறைகளை மீறிய,  முகக்கவசம் அணியாத மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாத 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் தனிமைப்படுத்தல் நடைமுறை சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் ஒக்டோபர் மாதம் 30 திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 527 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளாதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

அத்தோடு தனிமைப்படுத்தல் பகுதிகள் , தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்ட பகுதிகள் , பொது இடங்கள் எல்வாவற்றிலும் சமூக இடைவெளியை பின்பற்றுவதோடு , முகக்கவசம் அணிய வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.