கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்புகளை கொண்டதன் பின்னர் ஸ்பெயின் ஆறாம் மன்னர் பிலிப்பி சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

52 வயதான மன்னர் ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் நெருங்கிய தொடர்புகளை மன்னர் கொண்டிருந்தாக மாட்ரிட்டின் அரண்மனை (Royal Palace of Madrid) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் மன்னரின் மனைவியும், இரண்டு மகள்களும் தங்களது இயல்பான நடவடிக்கைகளை முன்ன‍ெடுத்து வருகின்றனர்.

தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து ஸ்பெய்னில் சுமார் 1.6 மில்லியன் கொரோனா தொற்றாளர்களும், 43,131 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், பல தடுப்பூசி சோதனைகளின் சமீபத்திய முடிவுகள் நம்பிக்கையை அளித்துள்ளதன் விளைவாக செவ்வாயன்று ஸ்பெயினின் அரசாங்கம் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டங்களைப் பற்றி விவாதிக்க உள்ளது.