நாட்டிலுள்ள பாடசாலைகளில் கொவிட்-19 பரவுவதை தடுக்கும் நோக்கில் கூடுதல் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவக்கைகளை செயற்படுத்த 105 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரிவேனாக்கள், கல்வி கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்காக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளில் உள்ள பாடசாலைகளைத் தவிர நாட்டின் 5,100 அரசப் பாடசாலைகள் நேற்று மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் திறக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.