(எம்.எப்.எம்.பஸீர்)

பொலிஸாரின் பயன்பாட்டுக்கு என 750 ஜீப் வண்டிகளை கொள்வனவு செய்ய அமைச்சர்வை நேற்று அனுமதியளித்துள்ளது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த ஜீப் வண்டிகளை 3 கட்டங்களாக கொள்வனவு செய்ய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் ஜீப் வண்டிகளில் 600 சாதாரண பொலிஸ் பயன்பாட்டுக்கும் ஏனைய 150 ஜீப் வண்டிகளும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கும் பயன்பாட்டுக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ முன்வைத்திருந்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைய இந்த  அனுமதியளிக்கப்பட்டுள்ளது.