ரஷ்யாவில் விருந்து ஒன்றில் மதுபானம் பற்றாக்குறையால் சனிடைசரை குடித்து 7 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேலும் இருவர் வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் மேற்கு பகுதியில் உள்ள டாட்டின்ஸ்கி மாவட்டத்தில் உள்ள டொமடோர் கிராமத்தில் ஒன்பது பேர் சனிடைசரை குடித்துள்ளனர்.

இந்நிலையில், 27 மற்றும் 59 வயதுடைய இரண்டு ஆண்களும், 41 வயதான ஒரு பெண்ணும் முதலில் உயிரிழந்துள்ளார்.

மேலும் ஆறு பேர் யாகுட்ஸ்க் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர். இருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

மரணமடைந்தவர்கள் 27 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய  பொது சுகாதார கண்காணிப்புக் குழுவான ரோஸ்போட்ரெப்னாட்ஸர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சனிடைசரை 9 பேர் குடித்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளன, அவர்களில் ஏழு பேரின் நிலை ஆபத்தானவை.

"சனிடைசரை  குடித்ததன் விளைவாக இந்த விஷம் நடந்ததுள்ளது " எனஅந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அவர்கள் குடித்த சனிடைசரை  69 சதவீதம் மெத்தனால் இருந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் இதுவரை மொத்தம் 20,64,748 கொரோனா வைரஸ் பாதிப்புகள்  பதிவாகியுள்ளன, 35,778 பேர் இறந்துள்ளனர்.

அதே நேரத்தில், ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யாவில் 24,822 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது.