மஸ்கெலியா காட்மோர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறித்த பகுதிக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் காட்மோர் புரக்மோர் தோட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகள் மற்றும் மகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தனிமைப்படுத்தலில் இருந்த நால்வருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் படி தற்போது அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் தந்தை மற்றும் மகன் கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் தாய் மற்றும் மகள் ஆகியோர் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த நால்வரும் அண்மையில் குறித்த பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் உறவினர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை மஸ்கெலியாவின் பிரவுன்ஸ்விக் மற்றும் பனியன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.