போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் கடந்த 14 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்து சிறுவர்கள் உயிரிழக்கின்றனர் அல்லது காயமடைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி 2005 முதல் 2019 வரையான காலப்பகுதியில் குறைந்தது 26,025 சிறுவர்கள் உயிரிழந்தாகவும் அல்லது காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா.வின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் மற்றும் அமெரிக்கா தனது படைகள் திரும்பப் பெறும் நிலையில‍ை ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரித்து வருகிறது.

உலகில் சிறுவர்களுக்கான ஆபத்து நிறைந்த நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் 11 ஆவது இடத்தில் உள்ளதாக 'Save the Children' அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் 2017 முதல் 2019 வரை பாடசாலைகள் மீது 300 க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.