( மயூரன் )தேன் எடுக்க  சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தேன் குளவி கொட்டியதில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.கொடிகாமம் பகுதியை சேர்ந்த சின்னப்பு அழகேந்திரம் (வயது 48) எனும் நபரே  மரணமடைந்துள்ளார்.
குறித்த நபர் மிருசுவில் தவசிக்குளம் பகுதியில் உள்ள காட்டுக்குள் கடந்த செவ்வாய்கிழமை தேன் எடுப்பதற்காக சென்று  உள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததையடுத்து , உறவினர்கள் அவரை தேடி சென்ற போது குளவிக் கொட்டுக்கு இலக்காகி மரணமடைந்திருப்பதை கண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கொடிகாமம் பொலிசாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.