பாடசாலை மாணவி ஒருவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளமையால் அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் இன்று (23.11.2020) காலை ஆரம்பமான நிலையில், எம்பிலிபிட்டிய பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவி ஒருவருக்கே திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, குறித்த மாணவி எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, மாணவியை பரிசோதித்த வைத்தியர்கள், குறித்த மாணவிக்கு கொரோனா தொற்றுக்கான எவ்வித அறிகுறிகளும் இல்லை என தெரிவித்துள்ளனர்.