இத்தாலியில் அடுத்த ஆண்டு ஜி - 20 மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக சவுதி அரேபியாவில் காணொளி வாயிலாக நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றியுள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மாநாட்டில் உறுதி அளித்தனர். 

அடுத்த மாநாடு 2021 இல் இத்தாலியிலும், 2022 இல் இந்தோனேசியாவிலும், 2023 இல் இந்தியாவிலும் நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.