இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசி 70.4 சதவீதம் கொவிட்-19 ஐ கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக அமைந்துள்ளது என ஆய்வுகளில் வெளிப்படத்தப்பட்டுள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியவை இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.

ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி 70 சதவீதம் 

ஃபைசர் மற்றும் மாடர்னாவின் தடுப்பூசிகள் 95 சதவீதம் பயனை வெளிக்காட்டிய பின்னர் இந்த முடிவு வெளியாகியுள்ளது.

சுகாதார மருத்துவ கட்டுப்பாட்டாளர்களினால் இந்த தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டால் கொவிட்-19 தொற்று நோயை கையாள்வதில் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு செய்யும்.

இந்த தடுப்பூசியை முதியவர்கள் உட்பட பல்வேறு வயதுடையவர்ளுக்கு பயன்படுத்தலாம்.

100 மில்லியன் டோஸ் ஒக்ஸ்போர்டு தடுப்பூசியை இங்கிலாந்து அரசு முன்கூட்டியே முன்பதிவு செய்துள்ளது, இது 50 மில்லியன் மக்களுக்கு நோயெதிர்ப்பு அளிக்க போதுமானவை ஆகும்.