கலிபோர்னியாவின், சென் ஜோஸில் அமைந்துள்ள தேவாலயத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சென் ஜோஸிலுள்ள மாநில பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கிரேஸ் பாப்டிஸ்ட் தேவாலயத்திலேயே (Grace Baptist Church) இந்த சம்பவம் அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.53 மணியளவில் பதிவாகியுள்ளது.

தாக்குதலின் போது தேவாலயத்தில் எவ்வித நிகழ்வுகளும், ஆராதனைகளும் இடம்பெறவில்லை என்றாலும், வீடுகள் இல்லாதவர்கள் அங்கிருந்தாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந் நிலையில் தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக சென் ஜோஸ் மேயர் சாம் லிக்கார்டோ தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.