ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் இடத்துக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் பிரதிநிதிகள் இந்த நியமனம் தொடர்பில் எழுத்து மூல கோரிக்கையை முன்வைத்ததாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க உறுதிப்படுத்தினார்.