ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை விடயத்தில் முறையாக செயற்படவில்லையென, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இருக்கின்ற ஐந்து நிரந்தர அங்கத்துவ நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வேற்றுமையால், ஐக்கிய நாடுகள் சபை முக்கியமான பிரச்சினைகளை தீர்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறதாகவும், சோமாலியா, இலங்கை போன்ற நாடுகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையினால் முறையாக செயற்பட முடிந்திருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் பதவி வகித்த காலகட்டம் குறித்த சிறப்பு அறிக்கை ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடதக்கது.